ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் வேலையின்மை வீதம் 4.2 வீதமாக அதிகரித்துள்ளது.
வேலையின்மை வீதம் ஜுலையில் 4.1 வீதமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்த நிலையில், அதைவிடவும் அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலிய பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடைந்துள்ள நிலையிலேயே வேலையின்மையும் இவ்வாறு அதிகரித்துள்ளது.