லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலை முயற்சியில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த அதிகாரியொருவர் உயிர் தப்பியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
லெபனான் பாதுகாப்பு ஏஜென்சிகளுடன் பணிபுரியும் ஹிஸ்புல்லா அமைப்பின் தொலைதொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு தலைமை அதிகாரியே இவ்வாறு உயிர் தப்பியுள்ளார்.
அதேவேளை, பெய்ரூட்டின் மையப்பகுதி, அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள்மீது இஸ்ரேல் தாக்குல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், 117 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கிடையில் லெபனானில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 280 ஆஸ்திரேலியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 13 ஆம் திகதிவரை மட்டுமே மீட்பு விமான சேவை பணி இடம்பெறும் என்பதால், வெளியேற விரும்புபவர்கள் வாய்ப்பை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபா.தயாபரன்.