ஆஸ்திரேலியாவின் 2026 – 27 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்டத்தில் குடியேற்றத் திட்டங்களில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்முறைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் நிரந்தரக் குடியேற்றத்துக்கான மொத்த ஒதுக்கீடு 185,000 தொடரவுள்ளது.
இதில் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்களுக்கு சுமார் 129,590 முதல் 129,950 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவிற்கு வெளியில் இருந்து விண்ணப்பிப்பவர்களுக்கு சுமார் 55,110 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திறன்சார் குடியேற்றத்துக்குரிய அனுமதி இனி வரும் காலங்களில் அதிக போட்டி நிறைந்ததாகவும், தகுதியின் அடிப்படையிலுமே இடம்பெறவுள்ளது.
இதன்படி உயர்கல்வி தகுதி பெற்றவர்கள், அதிகத் தொழில் திறன் கொண்ட விண்ணப்பதாரர்கள், சிறந்த ஆங்கிலப் புலமை கொண்டவர்கள், இளம் வயது குடியேற்றவாசிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
சுகாதாரம் , கட்டுமானம் , பொறியியல், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் பிராந்திய பணியாளர் தேவை சார்ந்த துறைகளுக்குக் குடியேற்றத்தில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
2026-27 மற்றும் 2028-29 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், நிகர வெளிநாட்டுக் குடியேற்றம் 1 மில்லியனுக்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.