Tasmania சுயேச்சை செனட்டர் டாமி டைரல், ஆளும் Labor கட்சியில் இணைந்துள்ளார்.
Jacqui Lambie Networkகில் இருந்து விலகிய பிறகு, Labor கட்சியின் கொள்கைகள் தமக்கு மிகவும் பொருத்தமானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
செனட்டில் அரசின் பலத்தை இந்த மாற்றம் அதிகரித்தாலும், சட்டங்களை நிறைவேற்ற அவர்களுக்கு இன்னும் பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
மக்கள் நலனுக்காகவும், பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கவும் அவர் தொடர்ந்து குரல் கொடுப்பார் என்று பிரதமர் அந்தோணி அல்பானீசி பாராட்டியுள்ளார்.
வாக்காளர்களின் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல், தன் மாநிலத்திற்கு சிறந்த நன்மைகளை பெற்றுத்தரவே இம்முடிவை எடுத்ததாக டைரல் உறுதியளித்துள்ளார்.
இந்த நிகழ்வு ஆஸ்திரேலிய அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.