ஆஸ்திரேலியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சிங்கி இறால்மீதான தடையை இவ்வருட இறுதிக்குள் சீனா நீக்கவுள்ளது.
சுமார் நான்காண்டுகளுக்கு பிறகே இத்தடையை சீனா நீக்கவுள்ளது. இந்த தகவலை பிரதமர் அந்தோனி அல்பானீஸி உறுதிப்படுத்தியுள்ளார்.
வியட்நாமில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் சீனா பிரதமர் ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதன்போதே மேற்படி முடிவு எட்டப்பட்டு தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா புத்தாண்டை முன்னிட்டு இவ்வருடத்துக்குள் இறால் ஏற்றுமதி ஆரம்பமாகும் என தெரியவருகின்றது. இது தொடர்பில் மீனவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி சீனாவென்பது குறிப்பிடத்தக்கது.