ஆளும் லேபர் கட்சியின் கட்சியின் புதிய வரி மாற்றங்கள் நாட்டின் முன்னேற்றத்தைத் தடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அங்கஸ் டெய்லர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, வீடுகளுக்கான முதலீட்டுச் சலுகைகளை நீக்குவது ஆஸ்திரேலியர்களின் சொந்த வீட்டு கனவை சிதைத்துவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கான தீர்வாக, நாட்டில் கட்டி முடிக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே வெளிநாட்டினரை குடியேற அனுமதிக்க வேண்டும் என்ற புதிய கொள்கையை எதிர்க்கட்சி தலைவர் முன்மொழிந்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் வீடுகளின் உற்பத்தித் திறனைக் கணக்கிட்ட பின்னரே குடியேற்ற வரம்புகள் நிர்ணயிக்கப்படும்.
சொந்த வீடற்ற நிலை உருவானால் ஆஸ்திரேலியாவின் தனித்துவமே அழிந்துவிடும் என்பதால், வீட்டு வசதி மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு தமது ஆட்சியில் முக்கியத்துவம் வழங்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.