Northern Territory பால்மெர்ஸ்டன் பகுதியில் 80 வயது முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மர்ம நபர் ஒருவர் வீட்டின் பின்புறக் கதவு வழியாக நுழைந்து, சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை வன்கொடுமைக்கு உட்படுத்திவிட்டு, தப்பியோடியுள்ளார்.
தப்பியோடிய அந்த நபரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வரும் வேளையில், பொதுமக்களிடம் இது குறித்த தகவல்களைக் கோரியுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு அரசுத் தலைமை வழக்கறிஞர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளி விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தற்போது வரை சந்தேகத்திற்குரிய நபர் குறித்த முறையான அடையாளங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.