விக்டோரியாவில் இரு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொலை செய்த Dezi Freeman வழக்கு தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து ஏழு மாதங்கள் தலைமறைவாக இருந்த Dezi Freeman கடந்த மார்ச் மாதம் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
எனினும், அவரது நடமாட்டங்கள் மற்றும் அவருக்கு உதவியவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இதன் ஓர் அங்கமாக விக்டோரியாவின் வடகிழக்கு பகுதியில் இரண்டு நபர்களைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 35 மற்றும் 48 வயதுடைய அந்த நபர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு இன்னும் முடிவடையாத நிலையில் இருப்பதால், கூடுதல் தகவல்களை வெளியிட காவல்துறை மறுத்துவிட்டது.