ஆஸ்திரேலிய அரசாங்கம் ,அமெரிக்காவின் பிரபல '3M' ரசாயன உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக சுமார் 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் இழப்பீடு கோரி பாரிய சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.
3M நிறுவனம் வழங்கிய தீயணைப்பு நுரையில் உள்ள PFAS எனப்படும் "என்றென்றும் அழியாத நச்சு இரசாயனங்கள்" சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நச்சுப்பொருட்களால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை நிர்வகிக்க ஏற்கனவே பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், தாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தயாரிப்புகளை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டதாகவும், அரசின் தற்காப்புப் பிரிவே இதனைத் தொடர்ந்து பயன்படுத்தியதாகவும் கூறி 3M நிறுவனம் இந்த வழக்கை எதிர்க்கத் திட்டமிட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த வழக்கு, ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே ஒரு மிக முக்கியமான சட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.