ஆஸ்திரேலியாவுடனான NZYQ நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உருவான அறக்கட்டளை நிதியிலிருந்து Nauru அரசு 30.5 மில்லியன் டாலர்களைப் பயன்படுத்தியுள்ளது.
இந்தத் தொகையில் பெரும்பகுதி அந்த நாட்டின் தேசிய விமான சேவையை விரிவாக்கம் செய்வதற்காக பெறப்பட்ட கடனை அடைக்க ஒதுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள நிதியானது ஜனாதிபதி அலுவலகத்தின் வணிகப் பயணங்கள், பொழுதுபோக்கு மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்காகச் செலவிடப்பட்டுள்ளது.
முப்பது ஆண்டுகால இந்த நீண்டகால ஒப்பந்தத்தின் மூலம் நவூரு அரசுக்கு முதல் ஆண்டில் மட்டும் $63 மில்லியன் டாலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதிப் பயன்பாட்டு விவரங்கள் சமீபத்திய நாடாளுமன்ற மதிப்பீட்டுக் கூட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.