மெல்போர்னின் கிழக்குப் பகுதியில் உள்ள 'Forest Hill Chase' வணிக வளாகத்தில், கத்தியுடன் சுற்றித் திரிந்த 30 வயது இளைஞன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞன் பெரிய ஆயுதத்தை வைத்திருப்பதை அங்கிருந்த பொதுமக்கள் கவனித்து அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அவரை பாதுகாப்பாகக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை மற்றும் அவர் யாரையும் நேரடியாக மிரட்டவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிடிபட்ட நபர் தற்போது முறையான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.