சிட்னி Bondi இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் போது துப்பாக்கி ஏந்திய நபரைத் தடுத்ததால் வீரராகப் போற்றப்பட்ட அகமது அல் அகமது, தற்போது தாக்குதல் வழக்கில் சிக்கியுள்ளார்.
இவர் தனது தந்தையை கழுத்தைப் பிடித்து நெரித்ததாகக் கூறப்படும் முறைப்பாட்டைத் தொடர்ந்து, காவல்துறை அவர் மீது பாதுகாப்பு ஆணையை (AVO) பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் அவர் தனது தந்தையைத் தொடர்புகொள்ளவோ அல்லது அவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வரும் ஜூலை 29 அன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
இருப்பினும், தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்று அகமது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்து பல அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்ட அவர், தற்போது தனது உடல்நலனில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.
அதேவேளை, அகமதுவிற்குத் திரட்டப்பட்ட நிதியுதவித் தொகையைப் பிரித்துக் கேட்டு அவரது சகோதரர்கள் மிரட்டியதாக அவர்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.