தெற்கு ஆஸ்திரேலியாவின் Adelaide. பகுதியில் காவல்துறை விசாரணையின் போது 44 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.
ஆயுதம் ஏந்திய ஒருவர் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதாகக் கிடைத்த புமுறைப்பாட்டைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகளை அவர் இரும்புத் தடியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அவரைக்கட்டுப்படுத்த காவல்துறை பயன்படுத்திய மின்சார அதிர்வு கருவி (Taser) பலனளிக்காததால், அதிகாரிகள் அவரை நேரடியாகப் பிடிக்க முயன்றனர்.
இந்த மோதலின் போது அந்த நபர் திடீரென நினைவிழந்ததைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட முதலுதவி சிகிச்சைகள் தோல்வியில் முடிந்தன.
இந்தச் துயரச் சம்பவம் குறித்து தற்போது உயர்தர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.