லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Peter Khalil இன் மெல்பேர்ணில் உள்ள தேர்தல் அலுவலகம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெயின்ட் மற்றும் ஏனைய திரவங்களைப் பயன்படுத்தியே இத்தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், ஹமாஸ் அமைப்பின் சின்னமெனக் கருதப்படும் அடையாளமொன்றும் அலுவலக கதவொன்றில் வரையப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என விக்டோரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் Peter Khalil சமூக ஒற்றுமைக்கான சிறப்பு தூதுவராகவும் செயற்படுகின்றார்.
அதேவேளை, அவரின் தேர்தல் அலுவலகம்மீதான தாக்குதலை கிறீன்ஸ் கட்சி தலைவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.