அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய அரசு வரவேற்றுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் முடிவுக்கு வருவது, உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிகவும் அவசியம் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஹார்முஸ்நீரிணையை மீண்டும் திறப்பது சர்வதேச வர்த்தகப் பாதைகளைச் சீரமைக்க உதவும் என்று ஆஸ்திரேலியா நம்புகிறது.
அணுசக்தி தொடர்பான கவலைகளுக்கு ஈரான் தீர்வு காண வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் நிலையான அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனது நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான எரிபொருள் இருப்பை ஆஸ்திரேலியா தயார் நிலையில் வைத்துள்ளது.
இந்த இராஜதந்திர முயற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான், கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் பங்களிப்பையும் ஆஸ்திரேலிய அரசு பாராட்டியுள்ளது.
மத்திய கிழக்கில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஆஸ்திரேலியா சர்வதேச பங்காளிகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.