சிட்னியில் இன்று இடியுடன் கூடிய கடும் மழை பெய்தது. இதனால் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. அத்துடன், வெள்ளத்தால் இலகு ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
அத்துடன், சிட்னியில் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுமார் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வார இறுதியில் கடும் காற்று வீசக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், இன்று பிற்பகல் முதல் நாளை மறுதினம்வரை ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் அடை மழை பெய்யக்கூடும் எனவும் மேற்படி திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சிட்னியில் கடும் காற்று காரணமாக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. சிட்னி நோக்கி வரவிருந்த விமானங்களும் தாமதித்தன.