ஈரானின் ஏவுகணைத் திட்டத்துக்கு பங்களிப்பு வழங்கும் அந்நாட்டு பிரஜைகள் ஐவருக்கு ஆஸ்திரேலியா பயண மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஈரானின் ஏவுகணைத் திட்டமானது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென்பதாலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்மீது ஒக்டோபர் முதலாம் திகதி 180 இற்கு மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையிலேயே மேற்படி தடை அமுலுக்கு வந்துள்ளது.
ஈரான் இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்களைச் சேர்ந்த ஐவருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் 200 இற்கு மேற்பட்டவர்களுக்கு பயண மற்றும் பொருளாதாரத் தடைகளை ஆஸ்திரேலியா விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.