தமிழினப் படுகொலையில் தப்பிப்பிழைத்த அகதி எழுத்தாளர் தீபவர்ணன் ஆனந்தமயில் எழுதிய நூல்கள் , நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் வரவேற்கப்பட்டு, அதற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
NSW நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் புட்டிகேக் Mark Buttigieg ஆற்றிய உரையில்,
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நேரடிச் சாட்சியங்களை இலக்கியமாகப் பதிவு செய்வதன் அவசியத்தையும் அகதிச் சமூகத்தின் மன உறுதியையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வின் போது, அந்த நூல்களின் பிரதிகள் மற்றும் சர்வதேச நீதிக்கான கோரிக்கை அறிக்கை ஆகியவை பல்வேறு அரசியல் தலைவர்களிடம் முறையாக வழங்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதன் மூலம் அவர்களின் வரலாற்றுப் போராட்டத்தை இந்த நிகழ்வு உலகிற்கு எடுத்துரைக்கிறது.
பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து தமிழர்களின் நீதிக்கான பயணம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.