வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சுமார் 235 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெனிசுலா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக லா குவைரா என்ற வடக்குக் கடற்கரைப் பகுதி மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் மருத்துவமனைகள் நிரம்பியுள்ள நிலையில், தற்காலிக கள மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசுத் தொலைக்காட்சியில் பேசிய சுகாதார அமைச்சர் கார்லோஸ் ஆல்வராடோ, மீட்புப் பணிகள் மற்றும் தற்போதைய இக்கட்டான சூழல் குறித்து விளக்கியுள்ளார்.