மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்படும் இஸ்ரேல் படையினருக்கு எதிராக ஆஸ்திரேலியா எந்தவொரு தடையையும் விதிக்காமை அதன் இரட்டை அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றது என்று சர்வதேச அபிவிருத்திக்கான ஆஸ்திரேலிய கவுன்ஸில் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஈரான் ஏவுகணைத் திட்டத்துடன் தொடர்புடைய ஐவருக்கு ஆஸ்திரேலியா பயண மற்றும் நிதித்தடைகளை இன்று விதித்துள்ளது.
இந்நிலையிலேயே மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பான லேபர் அரசின் அணுகுமுறை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் படைகள் பொறுப்புகூறலை வெளிப்படுத்த வேண்டும் எனவும், இதனை வலியுறுத்தி இஸ்ரேல் படைகள்மீதும் ஆஸ்திரேலியா தடைகளை விதிக்க வேண்டும் எனவும் மேற்படி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.