வெனிசுலா நாட்டைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கங்களில் ஆஸ்திரேலிய பிரஜைகளும் சிக்கியுள்ளனர்.
"வெனிசுலா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய எண்ணிக்கையிலான ஆஸ்திரேலியர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்கி வருவதாக" ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
"எங்கள் தனியுரிமை விதிமுறைகளின்படி (Privacy obligations), தனிப்பட்ட நபர்களின் பாதிப்புகள் குறித்து எங்களால் கூடுதல் தகவல்களை வழங்க முடியாது" என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடிமக்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் அதிகாரப்பூர்வமாக விவரிக்கவில்லை.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் அதிகாரிகள், அரசாங்கம் மற்றும் பிற கூட்டாளிகளுடன் ஆஸ்திரேலிய அதிகாரிகள் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.
வெனிசுலாவில் ஆஸ்திரேலிய தூதரகம் இல்லாததால், அங்குள்ள தனது குடிமக்களுக்குத் தூதரக உதவிகளை நேரடியாக வழங்குவதில் ஆஸ்திரேலிய அரசுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
வியாழக்கிழமை நாட்டின் வடக்குப் பகுதியைத் தாக்கிய இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் அல்லது நண்பர்களைக் கொண்ட அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார்.
"சமீப காலங்களில் நாம் கண்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். இதனால் மனித உயிரிழப்புகள், உள்கட்டமைப்பு சேதங்கள் என வெனிசுலா மக்கள் பேரழிவைச் சந்தித்துள்ளனர்" என்று பிரதமர் கூறினார்.
வெனிசுலாவின் மீட்புப் பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய அவசரக்கால உதவி நிதியம் (UN CERF) 22 மில்லியன் டாலர்களை விடுவித்துள்ளது.
ஐநா சான்றளித்த மீட்புக் குழுவினர் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுவார்கள் என்று வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.