மியன்மாருக்கு மேலும் 9 மில்லியன் டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்குவதற்கு ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது.
மியன்மாரில் அரசியல், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நிலைவரம் மோசமடைந்துவரும் நிலையிலேயே பிராந்திய அமைதியை கருத்திற்கொண்டு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் பங்களாதேஸ் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளுக்கு உதவியாக 800 மில்லியன்களை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது.
மியன்மாரில் 34 லட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். 18.6 மில்லியன் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.
மியன்மாரில் இராணுவ ஆட்சி நிலவுவதால் அந்நாட்டு அரசுக்கு எதுவித நிதி உதவியையும் ஆஸ்திரேலியா வழங்கவில்லை. மாறாக ஐ.நா. அமைப்புகள் ஊடாகவே உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.