ஆஸ்திரேலியாவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என மத்திய வங்கி (RBA) கணித்துள்ளது.
இதனால் ஆஸ்திரேலிய மக்கள் மேலும் 2 வருடங்களுக்குப் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடலாம்.
ஜூன் மாதம் நடைபெற்ற வட்டி விகிதக் கூட்டத்தில், ரொக்க வீதத்தை (Cash rate) 4.35 விழுக்காடாக எவ்வித மாற்றமும் இன்றித் தக்கவைக்க வாரியம் முடிவு செய்துள்ளது.
பணவீக்கத்தை 2-3% என்ற இலக்கு வரம்பிற்குள் கொண்டு வர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என அதன் கூட்ட அறிக்கையில் (Minutes) தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாட்டுப் போரின் தாக்கம்: அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் பதற்றமான சூழல் மற்றும் மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக, எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கக் கூடும் என RBA கவலை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள நிதியமைச்சர் ஜிம் சால்மர்ஸ், ஆஸ்திரேலியப் பொருளாதாரம் வெளிநாட்டு மோதல்களால் "பிணைக் கைதியாக" வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கை: பணவீக்கம் தொடர்ந்து கட்டுக்குள் வராமல் நீடித்தால், வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தத் தயங்க மாட்டோம் என RBA எச்சரித்துள்ளது.
Commonwealth Bank, NAB, ANZ: நடப்பு 2026 ஆம் ஆண்டின் இறுதி வரை வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது என எதிர்பார்க்கின்றன.
வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மேலும் இரண்டு முறை வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் எனக் கணிக்கிறது.
எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் நான்கு பெரிய வங்கிகளும் வட்டி விகிதக் குறைப்பை எதிர்பார்க்கின்றன.