Tasmania பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong இற்க, பாலஸ்தீன சார்பு சட்டத்தரணிகளால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Penny Wong உரையாற்றிக்கொண்டிருக்கையில் குறுக்கீடு செய்த சட்டத்தரணிகள், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் இஸ்ரேலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இவ்வாறு இடையூறுக்கு மத்தியில் தமது உரையை தொடர்ந்த வெளிவிவகார அமைச்சர், காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்தத்துக்கு மீண்டும் அழைப்பு விடுத்தார்.
அத்துடன், கத்தி கூச்சலிடுவது ஜனநாயக உரிமை அல்ல எனவும் சுட்டிக்காட்டினார்.
உங்களின் கரங்களில் இரத்தம் படிந்துள்ளது, முதுகெலும்புள்ள தலைமைத்துவமே எமக்கு வேண்டும் என்றெல்லாம் கோஷங்கள் எழுப்பட்டன. இதனையடுத்து மேடையிலிருந்து வெளிவிவகார அமைச்சர் விலகிச் சென்றுள்ளார்.