ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமருக்கு எதிராக மெல்போர்னில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கோ ஹோம் மோடி என பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, கோஷங்கள் எழுப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியா-இந்தியா வருடாந்திர தலைவர்கள் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக புதன்கிழமை ஆஸ்திரேலியா வந்தடைந்த பிரதமர் மோடி, மூன்று நாட்கள் தங்கியிருப்பார்.
வியாழக்கிழமை மெல்போர்னின் டாக் lands ஸ்டேடியத்தில் (Docklands Stadium) பிரம்மாண்ட நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையிலேயே அந்த மண்டபத்துக்கு வெளியில் போராட்டம் இடம்பெறுகின்றது.