மூலோபாய முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் என்பவற்றை பயன்படுத்தாவிட்டால் எல்லை பாதுகாப்பை பலப்படுத்த ஆஸ்திரேலியாவால் போராட நேரிடும் என்று எல்லை பாதுகாப்பு படை ஆணையாளர் Michael Outram எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, மேற்படி துறைகளுக்கு முதலீடுகளை செய்தால் மட்டுமே எதிர்கால நெருக்கடியை சமாளிக்க முடியும் எனவும் கன்பராவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கூறியுள்ளார்.
எல்லை பாதுகாப்பைக்கூட ஒரு சொத்தாகவே கருத வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவெளை, புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகை தொடர்பில் எல்லை பாதுகாப்பு ஆணையாளரிடம் எழுப்பட்ட கேள்விக்கு,
இவ்வருடம் 11 படகுகள் வந்தன எனவும், அவை முறையாக கையாளப்பட்டன எனவும் பதிலளித்துள்ளார்.