தெற்கு லெபனானில் ஒரு பெரிய நகரத்தில் உள்ள நகராட்சி தலைமையக கட்டிடத்தின் மீது புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மேயர் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் இதில் இல் 50 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் இப்போது லெபனான் அரசை குறிவைக்கும் வகையில் நகர்கிறது என்பதற்கு இது சான்றாகும்.
இஸ்ரேலிய பிரச்சாரத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக நகரின் சேவை மற்றும் நிவாரண நிலைமை குறித்து விவாதிக்க முனிசிபல் கவுன்சில் கூட்டத்தை இஸ்ரேலியர்கள் வேண்டுமென்றே குறிவைத்தனர் என்று காபந்து பிரதமர் நஜிப் மிகாடி கூறினார்.
லெபனானில் உள்ள ஐ.நா. தூதுக்குழு (UNIFIL) புதன்கிழமை காலை தெற்கு லெபனானின் Kfar Kela அருகே உள்ள அவர்களின் கண்காணிப்பு கோபுரத்தில் இஸ்ரேலிய தொட்டி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அதன் அமைதி காக்கும் படையினர் அவதானித்ததாகக் கூறியது. இரண்டு கேமராக்கள் அழிக்கப்பட்டன, கோபுரம் சேதமடைந்தது, UNIFIL தெரிவித்துள்ளது.
UNIFIL அறிக்கை குறித்து இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை.
தெற்கு லெபனானில் உள்ள UNIFIL அமைதி காக்கும் படையின் உறுப்பினர்களை அவர்களின் பாதுகாப்புக்காக போர் மண்டலத்திலிருந்து வெளியேற்றுமாறு இஸ்ரேல் முன்னர் ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
UNIFIL அதன் துருப்புக்கள் பல முறை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறுகிறது,
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant, எல்லைக்கு அருகில் வடக்கு இஸ்ரேலுக்கு விஜயம் செய்தபோது, பேச்சுவார்த்தைகளை அனுமதிக்க ஹெஸ்பொல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாது என்றார்
சபா.தயாபரன்.