ஆஸ்திரேலியாவில் பெண்கள் கருவுறும் வீதம் குறைவடைந்துள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் 2 லட்சத்து 87 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிகக்குறைந்தளவான பிறப்பு வீதம் இதுவாகும்.
பெண்கள் கருவுறும் வீதம், பெண்ணொருவர் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை என்பன தொடர்ந்து குறைவடைந்து வருகின்றது என்று புள்ளி விபரத் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குழந்தைகள் நலத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.