ஏர்பஸ் (Airbus) நிறுவனத்தின் பிரத்யேக A350-1000ULR விமானம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் இருந்து பிரான்ஸின் துலூஸ் (Toulouse) நகரத்திற்குத் தொடர்ந்து 24 மணி நேரம் 24 நிமிடங்கள் பறந்து சாதனை படைத்துள்ளது.
பயண தூரம் & நேரம்: 23,075 கிலோமீட்டர் தூரத்தை எவ்வித இடைநிறுத்தமும் (non-stop) இன்றி 24 மணி நேரம் 24 நிமிடங்களில் கடந்துள்ளது.
Airbus A350-1000ULR (Ultra Long Range). மிக நீண்ட தூரம் பறப்பதற்காக இதில் கூடுதல் 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் (Qantas) விமான நிறுவனம் மேற்கொள்ளவிருக்கும் 'Project Sunrise' திட்டத்திற்கான சோதனைப் பயணமாக இது நடத்தப்பட்டது.
எதிர்காலத் திட்டம்: 2027-ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் இருந்து லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு 20-22 மணி நேர நேரடி பயண சேவைகளைத் தொடங்க குவாண்டாஸ் திட்டமிட்டுள்ளது.
வணிக விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே மிக நீண்ட நேர சோதனைப் பயணங்களில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது.
நன்றி: Fareeth A Rahuman