சிட்னியில் நடந்த கால்பந்தாட்ட போட்டியின்போது நாஜி சல்யூட் அடித்தார் எனக் கூறப்படும் பொலிஸாரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி நடைபெற்ற போட்டியொன்றின்போதே 36 வயதான குறித்த நபர், நாஜி சல்யூட் அடித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், அவர் ஒக்டோபர் 14 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் நாஜி வணக்கத்துக்கு 2022 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இயற்றப்பட்ட சட்டத்தின் பிரகாரமே அவருக்கு எதிராக பொலிஸார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
தடைசெய்யப்பட்டுள்ள நாஜி வணக்கத்தை செலுத்தினால் 12 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதற்கு வழிவகுக்ககூடிய ஏற்பாடுகள் மேற்படி சட்டத்தில் உள்ளது.