குயின்ஸ்லாந்தில் NLP கட்சி வேட்பாளர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Gregory தொகுதி வேட்பாளரான Sean Dillon , தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் வழியிலேயே அவர்மீது இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தன்னை தாக்கியது மட்டுமல்லாது தனது குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்று வேட்பாளர் Sean Dillon கூறியுள்ளார்.
இச்சம்பவத்தை குயின்ஸ்லாந்து பிரீமியர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
Gregory தொகுதியானது எல்என்பி கட்சியின் கோட்டையாகக் கருதப்படுகின்றது.
தாக்குதலுக்கு இலக்கான Sean Dillon முன்னாள் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.