சிறார்களின் குற்றப் பொறுப்பு வயதெல்லையை 12 இல் இருந்து 10 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் Northern Territory நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Northern Territory இல் நடைபெற்ற தேர்தலில் Country Liberal
கட்சி வெற்றிபெற்ற பின்னர், புதிய நாடாளுமன்ற அமர்வு இவ்வாரம் கூடியது. இந்நிலையிலேயே நேற்று மேற்படி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி மற்றும் சுயாதீன உறுப்பினர்கள் எழுவர் இச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
லேபர் கட்சி ஆட்சியின்போது குற்றப்பொறுப்பு வயதெல்லையை 12 ஆக நிர்ணயிப்பதற்கு சட்டம் இயற்றப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே ஈராண்டுகளுக்கு பிறகு வயதெல்லை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டமானது பூர்வக்குடி மக்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.