ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் பதுங்கு குழிகள் மற்றும் இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு ஆஸ்திரேலியா ஆதரவு வழங்கியதை பாதுகாப்புதுறை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவால் நேற்று நடத்தப்பட்டுள்ள மேற்படி வான்வழித் தாக்குதலுக்கு Northern Territory இன் விமான தளமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது ஈரானுக்கான ஒரு எச்சரிக்கை நகர்வாகவும் கருதப்படுகின்றது.
சர்வதேச கடல்வழி வர்த்தக நடவடிக்கைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க ஆஸ்திரேலியா உறுதிபூண்டுள்ளது.
இதன்அடிப்படையிலேயே விமானத்தளத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புதுறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து கிளர்ச்சியாளர்கள், சர்வதேச நாடுகளின் வணிக கப்பல்கள்மீது தாக்குதல்களை நடத்திவருகின்றமை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்நிலையிலேயே அவ்வமைப்பை ஒடுக்குவதற்குரிய கூட்டு தாக்குதலை செங்கடல் பகுதியில் அமெரிக்கா முன்னெடுத்துவருகின்றது.