தொலைதூர வடக்கு குயின்ஸ்லாந்து கடற்பரப்பில், சுமார் 12 புகலிடக் கோரிக்கையாளர்களை (Asylum seekers) ஏற்றிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் படகு ஒன்றை ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் (ABF) குயின்ஸ்லாந்து காவல் துறையினரும் இணைந்து இடைமறித்துள்ளனர்.
கேப் யோர்க் (Cape York) தீபகற்பத்தில் உள்ள வொய்பா கடற்பகுதிக்கு அருகில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
படகில் இருந்தவர்கள் சீனக் குடியுரிமை பெற்றவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனிதக் கடத்தல் நடவடிக்கை தொடர்பான சந்தேகத்தின் பேரில் அவர்கள் அனைவரும் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் அடையாளம், குடியுரிமை மற்றும் பயணச் சூழ்நிலைகளை உறுதிப்படுத்த எல்லைப் பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க முகமைகள் விசாரணை நடத்தும்.
மனிதக் கடத்தலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில், இந்தச் சட்டவிரோதப் பயணத்தை ஒருங்கிணைத்தவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும்.
வடக்கு குயின்ஸ்லாந்து கடற்பகுதியில் தொடர்ந்து நடைபெறும் எல்லைப் பாதுகாப்புப் பணிகளை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.