பொலிஸ் காவலில் இருந்த 29 வயது பூர்வக்குடி இளைஞர் ஒருவரிடம் பொலிஸார் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டுள்ளனர் என்று நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸ் கண்காணிப்புக்குழு கண்டறிந்துள்ளது.
மூன்று பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு செயற்பட்டுள்ளனர் எனவும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொலிஸ் கண்காணிப்பு குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2020 மே மாதம் 29 வயது பூர்வக்குடி இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். திருட்டு குற்றச்சாட்டில் அவர் பொலிஸார் காவலில் வைக்கப்பட்டார்.
அவருக்கான சட்ட உதவி மறுப்பு, பலவந்த வாக்குமூலம், தவறான தகவல் உள்ளடக்கம் உள்ளிட்ட கடுமையான அதிகார மீறல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விசாரணையில் பொலிஸார் தவறான நடத்தையில் ஈடுபட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.