விக்டோரியா காவல்துறை மேற்கொண்டு வரும் பாலியல் அத்துமீறல் தொடர்பான விசாரணையில் சிட்னி ஸ்வான்ஸ் (Sydney Swans) அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் தொடர்புபட்டுள்ளனர் என தெரியவருகின்றது.
எஸென்டன் (Essendon) அணிக்கு எதிரான போட்டியில் 36 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஸ்வான்ஸ் அணி தங்கியிருந்த எம்சிஜி (MCG) மைதானத்திற்கு அருகிலுள்ள புல்மேன் ஹோட்டலில் (Pullman Hotel) நடந்ததாகக் கூறப்படும் அத்துமீறல் சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாட் வார்னர், ஐசக் ஹீனி, ஜேம்ஸ் ஜோர்டன் மற்றும் ரிலே பைஸ் ஆகிய வீரர்களே இந்த விசாரணையுடன் தொடர்பில் இருப்பதாக தெரியவருகின்றது.
இருப்பினும், இவர்கள் நேரடியாக இதில் ஈடுபட்டுள்ளார்களா அல்லது இந்த நான்கு பேரும் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்களா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.
இச்சம்பவத்துடன் பகிரங்கமாகத் தொடர்புபடுத்தப்பட்ட ஐந்தாவது வீரர் ஒருவர் இன்னும் காவல்துறையிடம் பேசவில்லை என்றும் தெரியவருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை அறிக்கை ஒன்றை வெளியிட்ட விக்டோரியா காவல்துறை, துல்லியமான பின்னணிச் சூழல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
"ஆகஸ்ட் 17 அன்று கிழக்கு மெல்போர்னில் நடந்த பாலியல் அத்துமீறல் புகார் குறித்து பாலியல் குற்றப்பிரிவு துப்பறியும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அதிகாலை வேளையில் வெலிங்டன் பரேடில் உள்ள ஒரு ஹோட்டலில் இச்சம்பவம் நடந்துள்ளது.
துல்லியமான பின்னணிச் சூழல் இன்னும் நிறுவப்படவில்லை; இச்சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹோட்டலில் இருந்த பலரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது, இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவோ அல்லது முறைப்படி விசாரிக்கப்படவோ இல்லை.
"நடந்த சம்பவத்தால் நாங்கள் தீவிர ஏமாற்றமடைந்துள்ளோம்; பல கேள்விகள் உள்ளன என்பதைப் புரிகிறது. கூடுதல் தகவல்களைத் திரட்டியவுடன் விரிவான அறிக்கை அளிப்போம்," என்று அவர் கூறினார்.
இச்சம்பவத்தால், இன்று அறிவிக்கப்படவிருந்த ஏஎஃப்எல் அமைப்பின் 46 வீரர்கள் கொண்ட 'ஆல் ஆஸ்திரேலியன்' (All Australian) அணியின் அறிவிப்பு தாமதமாகி, வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று அறிவிக்கப்படவிருந்த அந்தப் பட்டியலில் குறைந்தபட்சம் ஒரு ஸ்வான்ஸ் வீரராவது இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அணியில் இடம்பெறும் வீரர்கள் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஏஎஃப்எல் விருதுகள் இரவில் மேடையில் தோன்றுவதாக இருந்தது.
தலைப்புகள் சில