மரம் முறிந்து விழுந்ததில் விக்டோரியாவை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கெவிங்டன் பகுதியில் இன்று அதிகாலை மரமொன்று முறிந்துவிழுந்துள்ளது.
இதன்போதே மரத்துக்கு அருகில் முகாமிட்டிருந்த குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். மரம் விழுந்ததில் வாகனமொன்றும் சேதமடைந்துள்ளது.