நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி காணாமல் போன ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலையில் 39-ஆக இருந்தது, தற்போது 41-ஆக உயர்ந்துள்ளது.
ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் (DFAT) 4 அவசரகால மீட்புக் குழு அதிகாரிகளும், 4 விரைவு மீட்புக் குழுவினரும் இன்று காத்மாண்டுவை சென்றடைவார்கள் என தெரியவருகின்றது.
ஏற்கனவே நிலவர களத்தில் உள்ள சுமார் 20 ஆஸ்திரேலிய பணியாளர்களுடன் இவர்கள் இணையவுள்ளனர்.
இந்த பேரழிவின் பேரதிர்ச்சியிலிருந்து ஆஸ்திரேலிய வாழ் நேபாள சமூகம் இன்னும் மீளாத நிலையில், நாட்டின் உள்நாட்டிலேயே அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பேரழிவு ஏற்பட்டதில் இருந்து காணாமல் போன தங்கள் அன்பிற்குரியவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுவதற்காக, சில ஆஸ்திரேலிய வாழ் நேபாளிகள் அப் பகுதிக்கு நேரில் விரைந்துள்ளனர்.