சிட்னியில் தென்மேற்கு பகுதியிலுள்ள Georges ஆற்றிலிருந்து தாயும், இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
32 வயது தாயும், ஐந்து வயது மகன் மற்றும் ஏழு வயது மகள் ஆகியோர் ஆற்றில் மூழ்குவதைக் கண்டவர்கள் உடன் அவசர சேவை பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.
அவர்களை மீட்பதற்குரிய முயற்சியிலும் ஈடுபட்டனர். எனினும், அவர்கள் ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்டனர்.
மீட்பு நடவடிக்கையில் படகுகள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. எனினும், நீண்ட தேடுதலுக்கு பிறகு மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளில் முன்னெடுத்துவருகின்றனர்.