Australian Capital Territory இல் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியமைப்பதற்குரிய வாய்ப்பை லேபர் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
இதன்படி ACT இல் லேபர் கட்சியின் ஆட்சி 23 ஆண்டுகளுக்கு மேலாக தொடரவுள்ளது.
லேபர் கட்சி 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. லிபர் கட்சி 8 ஆசனங்களையும், கிறீன்ஸ் கட்சி இரு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. இரு சுயாதீன வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.
ஓரிரு தொகுதிகளுக்குரிய வாக்கெண்ணும் பணி இன்னும் இறுதி பெறவில்லை. இருந்தாலும் ஆட்சியமைப்பதற்குரிய வாய்ப்பு லேபர் கட்சிக்கே பிரகாசமாக தென்படுவதாகக் கூறப்படுகின்றது.
எதிர்வரும் 30 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.