சிட்னி நகரின் தென்மேற்குப் பகுதியில் தனது கணவரைக் கொன்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டி குப்பைத் தொட்டிகளில் வீசிய பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிர்மீன் நௌஃப் (55) என்ற அந்தப் பெண், கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணை தொடங்குவதற்கு சற்று முன்பு, தன் மீதான குற்றச்சாட்டை மாற்றிக் கொண்டு, குறைவான தீவிரத்தன்மை கொண்ட குற்றவியல் கொலை (manslaughter) குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
அதிகப்படியான தற்காப்பு நடவடிக்கை என்ற அடிப்படையில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இந்த ஒப்புதலை ஏற்றுக்கொண்டனர்.
அவரது கணவரான 62 வயது மம்தூஹ் நௌஃப், ஜூலை 2023 இல் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கிரீன்அக்ரேஸில் உள்ள அவர்களது வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
மம்தூஹ் நௌஃபின் உடல் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை. வழக்கின் ஒப்புதல் உண்மைகளின்படி, மே 2023 இல் ஒரு இரவில் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதாகவும், அப்போது தான் தாக்கப்பட்டு தப்பிக்க முயன்றதாகவும் நௌஃப் உளவியலாளர்களிடம் தெரிவித்தார்.
சமையலறை தரையில் தள்ளப்பட்டு தான் கழுத்து நெரிக்கப்பட்டதாகவும், அப்போது தன் உயிர் ஆபத்தில் இருப்பதாக நம்பி, அருகில் இருந்த பழுதுபார்ப்பு கருவியைக் கொண்டு அவரைக் குத்தியதாகவும் அவர் கூறினார்.
பின்னர் நௌஃப் உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அடுத்தடுத்த நாட்களில் வீட்டில் இருந்த ஒரு சாட்சி, பிரிக்கப்பட்ட 'பெரிய வட்ட வடிவ ரம்பத்தின் துண்டுகள்' மற்றும் சில பிளாஸ்டிக் துண்டுகளில் இரத்தம் படிந்திருப்பதைக் கண்டதாகக் கூறியுள்ளார்.
சட்டக் காரணங்களால் அடையாளம் வெளியிட முடியாத அந்த சாட்சியின் உதவியுடன், மம்தூஹ் நௌஃபின் உடற்பாகங்கள் குப்பைப் பைகளில் வைக்கப்பட்டு குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்டன.
நீதிபதி பீட்டர் ஹமில் இன்று நௌஃபுக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தார்,