பிரிஸ்பேனின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளார்.
இரு வாகனங்கள் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காரில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளனர். கார் சாரதி படுகாயம் அடைந்துள்ளார். மற்றைய வாகனத்தின் சாரதியும் காயமடைந்துள்ளார்.
இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.