சிறார்களின் ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக
23 வயதான அப்துல்லா ஷபிக் என்ற பல்கலைக்கழக மாணவருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஒரு மடிக்கணினியில் இத்தகைய சட்டவிரோதக் காட்சிகளை உருவாக்கியதையும் சேமித்து வைத்திருந்ததையும் அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சிலர் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் ஏற்கனவே சிறையில் கழித்த காலத்தைக் கணக்கில் கொண்டு, வரும் ஏப்ரல் மாதம் பிணையில் செல்ல விண்ணப்பிக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.