" இது உங்கள் நிலம் அல்ல, இங்கு நீங்கள் ராஜாவும் அல்லர்" என்று பிரிட்டிஷ் மன்னர் மற்றும் ராணிக்கு எதிராக சுயாதீன செனட்டர் Lidia Thorpe இன்று கோஷம் எழுப்பினார்.
மன்னரும், ராணியும் இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர்.
அவ்வேளையிலேயே அவர்களுக்கு எதிராக மண்டபத்தில் சுயாதீன செனட்டர் Lidia Thorpe
கோஷம் எழுப்பியுள்ளார்.
' எமது மக்களுக்கு எதிராக நீங்கள் இனப்படுகொலை செய்துள்ளீர்கள், எமது நிலத்தை திருப்பு தாருங்கள்," என்று அவர் சத்தமாக குரல் எழுப்பினார்.
இதனையடுத்து பாதுகாப்பு தரப்பினர் சுயாதீன செனட்டரை நோக்கி சென்றனர். அவர் மன்னரை நோக்கி அணுகுவதை தடுத்து நிறுத்தினர். எனினும், செனட்டர் ஓயவில்லை. மன்னருக்கு எதிராக தொடர்ந்து கோஷமிட்டார். இதனால் அவர் மண்டபத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
மன்னருக்கான வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றிருந்த முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள், எதிர்ப்பு போராட்டம் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
செனட்டர் என்ற அடிப்படையிலேயே Lidia Thorpe
நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது.