NSW புளூ மவுண்டன்ஸ் (Blue Mountains) பகுதியில் வார இறுதியில் தாயால் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டாவது குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:45 மணியளவில், 'வாலி ஹைட்ஸ்' (Valley Heights) பகுதியில் உள்ள 'வாரடா சாலையில்' (Waratah Rd) நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் மூன்று குழந்தைகள் மற்றும் 42 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
அவர்களில் 5 வயதுடைய மூத்த குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. காயமடைந்த 1 வயது மற்றும் 3 வயதுடைய மற்ற இரண்டு குழந்தைகள் அவசர அவசரமாக மவைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், வைத்தியசாயில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டாவது குழந்தையும் தற்போது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.