கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் நுற்றுக்கணக்கான ஊழியர்களை சட்டவிரோதமான முறையில் பணிநீக்கம் செய்த, Qantas நிறுவனம், பல மில்லியன் டொலர்களை இழப்பீடாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் முற்கட்டமாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மூவருக்கு 170,000 டொலர்களை இழப்பீடாக வழங்குமாறு மேற்படி நிறுவனத்துக்கு பெடரல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
2020 ஆகஸ்ட் மாதம் 1,700 ஊழியர்களை, பணிநீக்கம் செய்தமை சட்டவிரோதம் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மூன்று ஊழியர்களின் வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில், மூவருக்கும், 30,000, 40,000 மற்றும் 100,000 டொலர்கள் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை பணிநீக்கம் செய்யப்பட்ட 1700 ஊழியர்களுக்குமான இறுதி இழப்பீட்டு தொகையை வழங்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனமும், போக்குவரத்து தொழிலாளர் சங்கமும் முடிவுகளை எடுக்க வேண்டும். இது தொடர்பில் இரு தரப்புகளினதும் சட்டத்தரணிகள் ஆராய்ந்துவருகின்றனர்.
இழப்பீட்டு தொகை இன்னும் மதிப்படப்படவில்லை. எனினும், , Qantas நிறுவனத்துக்கு மில்லியன் கணக்கான டொலர்களை வழங்க நேரிடும் என ஊகிக்கப்படுகின்றது.
நான்கு ஆண்டுகளாக இழுபறியில் உள்ள இப்பிரச்சினையை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று இரு தரப்பினருக்கும் நீதிபதி அறிறுவுத்தினார்.