கிரீன்ஸ் கட்சியின் தலைவராக 16 மாதங்கள் பதவி வகித்த செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் (Larissa Waters), உடல்நலக்குறைவு காரணமாக அப்பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
49 வயதான அவர், தனக்கு ஏற்கனவே இருந்துவந்த சிறுநீரக நோய் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளளதால், அது தொடர்பில் சிகிச்சைப் பெற்றுவருவதாக கிரீன்ஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இன்று மாலை நடைபெற்ற இணையவழிச் சந்திப்பின் போது, இப்பதவியிலிருந்து விலகும் தனது முடிவை அவர் சக உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவராகச் செயலாற்றிய காலத்திற்கு நன்றி தெரிவித்துள்ள செனட்டர் வாட்டர்ஸ், தனது உடல்நல மீட்சியில் கவனம் செலுத்துவதற்காக "மெதுவான வேகத்தில்" இயங்க வேண்டிய சூழல் உள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
"மக்களுக்காகவும் இந்த பூமிக்காகவும் போராடும் கிரீன்ஸ் கட்சியின் தலைவராக இருந்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதையாகும்" என்று திங்கள்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.