சவூதி ரியாத்தில் சர்வதேச விமான நிலையத்தின் மீது இந்த வாரத்தில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தகவல்படி, உயிரிழந்தவர்களில் நான்கு சவூதி நாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
பாலஸ்தீனர், பங்களாதேஷைச் சேர்ந்த இருவர் மற்றும் அமெரிக்கா, ஜோர்டான், சிரியா, சூடான், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.
இதனையடுத்து ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் (King Khalid International Airport) சேவைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அண்டை நாடான ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் பாரிய இராணுவத் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து, மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் இந்த வாரத்தில் பலமுறை இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை சூடான் நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்ட தாக்குதல் உட்பட, முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"இந்தக் கொடூரமான தாக்குதல்கள் அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் மீதான வெளிப்படையான அலட்சியத்தைக் காட்டுகின்றன. இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்று ரூபியோ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வியாழக்கிழமை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் விமானி ஒருவர் உட்பட குறைந்தது மூன்று சவூதி குடிமக்கள் கொல்லப்பட்டதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் பயணிகள் தங்களது விமானங்களின் நேரங்களை விமான நிறுவனங்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு விமான நிலைய நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் 'FlightAware' தளத்தின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்த விமான நிலையத்தில் குறைந்தது 225 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சனிக்கிழமையன்று, 'flightradar24' கண்காணிப்புத் தரவுகளின்படி, ரியாத் நோக்கிய அனைத்து விமானங்களும் வேறு வழிகளில் திருப்பப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்டிருந்தன.
ஏமனில், புதன்கிழமை அதிகாலை கிளர்ச்சியாளர்கள் ஏடன் சர்வதேச விமான நிலையத்தின் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பெற்ற முன்னேற்றங்களைத் தலைகீழாக மாற்றும் முயற்சியாக, ஏமன் அரச படைகளுக்கு சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி ஆதரவை வழங்கி வருகின்றன. இதனால் ஹவுதிகளுக்கும் சவூதி ஆதரவு பெற்ற ஏமன் அரச படைகளுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது.
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும்போது ரியாத் விமான நிலையத் தாக்குதல்கள் குறித்து கேட்கப்பட்டதற்கு, டொனால்ட் டிரம்ப், "இது நல்லதல்ல" என்றும் "நான் இதில் மகிழ்ச்சியடையவில்லை" என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
க இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.