பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாடு, தென்பசுபிக் பிராந்திய நாடான சமோவாவில் இன்று கோலாகலமாக ஆரம்பகின்றது.
நாளை மறுதினம் 26ஆம் திகதி வரை குறித்த மாநாட்டுக்கு பிரிட்டிஷ் மன்னர் தலைமை வகிக்கின்றார். சமோவா நாட்டுக்கு செல்வதற்கு முன்னர், மன்னர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸியும் மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
சுற்றுசூழல், சமுத்திர பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாடுகள் தொடர்பில் மாநாட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளன.
பருவநிலை மாற்றத்தால் பசுபிக் பிராந்திய நாடுகள் அதிகம் பாதிக்கப்படுவதாலேயே சுற்றாடல் மற்றும் சமுத்திர பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு, பசுபிக் நாடொன்றில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு முடியும் நாளில், தலைவர்களால் மாநாட்டு பிரகடனம் வெளியிடப்படும்.
மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் அந்தோனி அல்பானீஸி, அங்கு இரு தரப்பு சந்திப்புகளிலும் ஈடுபடவுள்ளார்.