மேற்கு சிட்னியிலுள்ள வீடொன்றில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
64 வயது நபரொருவர்மீதே இவ்வாறு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவரின் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டாலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
சம்பவம் தொடர்பில் 34 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.